Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Shiva Temples

Arulmigu Sri bhramapureeswarar Shiva Temple, Sirukanur, Thirupattur,Tiruchi

அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி உடனுரை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் சிறுகனூர், திருபட்டுர்


Arulmigu Sri bhramapureeswarar Shiva Temple, Sirukanur, Thirupattur,Tiruchi!!



இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்  

இறைவி :அருள்மிகு பிரம்ம சம்பத் கௌரி அம்மன்

தல மரம் :புளியமரம்

தீர்த்தம் :

TiruchiDistrict_Bhiramapureeswarartemple_thirupattur_Shivan Temple


அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி உடனுரை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு.

படைப்பு தொழிலை செய்து வந்த பிரம்மனுக்கு முற்காலதில் ஐந்து தலைகள் இருந்ததாகவும் மும்மூர்திகளில் ஒருவராக அவர் கருதபட்டதாலும் பிரம்மனுக்கு சிறிது கர்வம் ஏற்பட்டது. கர்வத்தை போக்க நினைத்த சிவபெருமான் ஒரு சந்தர்ப்பத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்துவிட்டதுடன் படைக்கும் தொழிலையும் இழக்ககடவாய் என்று சபித்துவிட்டார். அதிர்ச்சியுடன் பிரம்மன் தனது தவறை உணர்ந்து சாப விமோசனதிர்காண உபயம் என்னவென்று சிவனிடம் பணிவுடன் கேட்டபோது தேச சஞ்சாரம் செய்து ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருவாயாக தகுந்த நேரமும் இடமும் வரும் போது நாமே உனக்கு சாப விமோசனம் தருவோம் என்று கூறினார்.

இதனையடுத்து பிரம்மன் நாடெங்கும் சுற்றி திரிந்து ஆங்காங்கே சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழி பட்டு வந்தார். இவ்வாறு தேச சஞ்சாரம் செய்து வந்த பிரம்மன் திருபிடவூர் என்ற இந்த திருபட்டுருக்கு வாந்தி குறுகிய தொலைவு இடைவெளிகளில் 12 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இவரது இந்த வழிபாட்டின் மகிழ்ந்த சிவபெருமான் பிரம்மன் முன் தோன்றி அவருக்கு சாப விமோசனம் கொடுத்து அவருக்கு மீண்டும் படைக்கும் தொழிலை தொடங்க அனுமதி வழங்கினார். அலைந்து திரிந்து உடல் பொலிவை இழந்த பிரமனுக்கு சிவனுடன் வந்த பார்வதி தேவி உடல் பொலிவை மீண்டும் வழங்கினார்.

பிரம்மபுரீஸ்வரர்

இவ்வாறு பிரம்மனால் வழிபட்ட சாப விமோசனம் பெற்றதால் இங்குள்ள ஈசன் பிரமபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிரம்மனின் பொலிவை மீண்டும் வழங்கியதால் இங்குள்ள அம்மன் பிரம்ம சம்பத் கௌரி என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறாள் . சாப விமோசனம் பெற்ற பிரம்மன் பலவாறாக சிவனை துதித்து வணங்கினார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் இனி படைக்கும் தொழிலை செய்வதோடு உன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் தேவைக்கேற்ப தலை எழுத்தையே மாற்றி எழுதலாம் என்று அருள் செய்தார்.

இந்த நம்பிக்கையினால் நல்ல நிலையில் இருந்து வீதி வசத்தால் அந்த வசதி வாய்பை இழந்து தவிக்கும் பக்தர்கள் இந்த தலத்திற்கு வந்து பூஜித்து தங்களின் தலை எழுத்தை மாற்றி கொள்ளும் நிறைவுடன் செல்கின்றனர். இங்கு வந்து சென்ற பின் அவர்களின் வாழ்வில் இழந்தவற்றை மீண்டும் பெற்று மகிழ்வதாக அவர்கள் மற்றவர்களிடம் கூறியதிலிருந்து இக்கோவில் பிரம்மனையும் ஈஸ்வரனையும் அம்மனையும் வாழ்பட தற்போது திரளான பக்தர்கள் பல்வேறு பகுதிகலிலிருந்தும் இக்கோவிலுக்கு வார துவங்கி உள்ளனர்.

பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி

பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி இக்கோவிலின் பிராகாரத்தில் தெற்கு பகுதியில் உள்ளது. இதை உறுதி படுத்தும் வகையில் இக்கோவில் வடக்கு பிராகாரத்தில் பாதாள லிங்கம் உள்ளது. பாதாள லிங்கம் ஒரு கோவில் இருந்தாலே அருகில் ஏதோ ஒரு ஜீவ சமாதி இருக்கிறது என்பது உட்பொருள். இங்குள்ள கால பைரவர் இப்பகுதி மக்களுக்கு நோய் தீர்க்கும் வைத்தியரை போல் உதவுகிறார். பைரவர் விபூதி குணபடுதிவிடுவதாக அப்பகுதி மக்கள் இன்றும் உறுதியாக் நம்புகின்றனர்.

சூரிய கதிர்கள்

இக்கோவில் பிரமபுரீஸ்வரர் பிரதான சிவலிங்கத்தின் மீது ஆண்டிற்கு மூன்று நாட்கள் சூரியனின் நேரடி கதிர்கள் விழுகின்றன. சிவலிங்கம் அமைந்துள்ள கருவரைக்கும் கோயிலின் முகப்பிற்கும் இடையே சுமார் 100 மீட்டர் அதாவது 300 அடி தூரம் உள்ளது. இடையில் 7 நிலபடிகளை கடந்து சேரும் வகையில் கோயில் கட்டபட்டுள்ளது. இந்த 7 வாசல்களையும் கடந்து இக்கோவிலின் கருவரையில் எப்போதும் இயற்கை வெளிச்சம் கானபடுவது மிக அரிதான காட்சி. எந்த விளக்கு ஒளியும் இல்லாமல் சிவலிங்கத்தை பளிச்சென தரிசிக்கும் வாய்பு இக்கோவிலில் மட்டுமே உள்ளது.

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம்

பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குபிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது. காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம்வரும் போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி (குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.நவகிரகங்களில் குரு பகவானுடைய தேவதை ப்ரம்மா என்பதால் மஞ்சள் காப்பு, மஞ்சள் வஸ்த்திரம் எல்லாம் பிரதானம்.

ஸ்ரீ பிரம்மன் வழிபட்ட சிவலிங்கங்கள்

1. ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் .
2. ஸ்ரீ பழமாலை நாதர்.
3. ஸ்ரீ பாதாள எஸ்வரர்.
4. சுத்த ரத்தினேஸ்வரர்
5. தாயுமானவர்.
6. சப்த ரிஸீஸ்வரர்.
7. காலடி நாதர்.
8. ஜம்புகேஸ்வரர்.
9. கைலாச நாதர்.
10. ஸ்ரீ அருணாசலேஸ்வரர்
11. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் .
12. ஸ்ரீ மண்டுக நாதர்.

பிரார்த்தனை ஸ்தலம்

திங்கள் கிழமை, திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் ஜென்மநட்சத்திர நாட்களில் பக்தர்கள் இவரை வணங்குவது விசேஷ பலன் தரும்.

குருபெயர்ச்சியன்று பிரம்மாவிற்கு பரிகார யாகபூஜை நடக்கும்.திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு வேண்டுதல் தான்.
ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை ஸ்தலம்.

பூஜித்தவர்கள்

1.பிரம்மன்
2.மகாவிஷ்ணு
3.சூரியன்.
4.பதஞ்சலி
5.வியாகிர பாதர்.

தல சிறப்பு

பிரம்மபுரீஸ்வரர், பிரம்மநாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில்பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்களும் இங்கு உள்ளன. எனவே ஜோதிர்லிங்கங்களை தரிசித்த பலன் இங்கு சென்றாலே கிடைத்து விடுகிறது. தெற்கு நோக்கி இருக்க வேண்டிய காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். பிரம்மனுக்கு 36 தீபம் (27 நட்சத்திரம், 9 கிரகம்) ஏற்றி, 108 புளியோதரை உருண்டைகளை படைத்து வழிபடுவது சிறந்தது. ஒன்பது முறை பிரம்மனை வலம் வர வேண்டும்.



திருக்கோயில் முகவரி :

அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சம்பத் கௌரி உடனுரை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
சிறுகனூர்,
திருபட்டுர்
திருச்சி மாவட்டம்



திருக்கோயில் திறக்கும் நேரம்:

இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.



அமைவிடம்:

Shiva Temple